News Just In

11/06/2024 04:28:00 PM

வாகன இறக்குமதி விரைவில் - கட்டங்கட்டமாக முன்னெடுக்க விசேட பேச்சுவார்த்தை!

வாகன இறக்குமதி விரைவில் - கட்டங்கட்டமாக முன்னெடுக்க விசேட பேச்சுவார்த்தை!



வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன இருப்பதாகவும்,

மூன்று கட்டங்களாக வாகன இறக்குமதியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர்களுடன் இதுதொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

No comments: