News Just In

11/06/2024 04:33:00 PM

பேண்ட் வாத்தியக் குழு போட்டியில் கல்முனை ஸாஹிரா முதலிடம்!

பேண்ட் வாத்தியக் குழு போட்டியில் கல்முனை ஸாஹிரா முதலிடம்



நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான "பேண்ட் வாத்தியக்குழு போட்டிகளில்" கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் "cadet band" குழு, அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பெற்றுக் கொண்டது.

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் மாணவர்களை பயிற்றுவித்து நெறிப்படுத்திய சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அமீர் ஆகியோர்களை கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். ஜாபீர், பிரதி - உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் ஆகியோர் மகிழ்ச்சியோடு வரவேற்று, பாராட்டி கௌரவித்தனர்.

No comments: