News Just In

11/08/2024 10:04:00 AM

பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்தவர் விமான நிலையத்தில் கைது

பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்தவர் விமான நிலையத்தில் கைது



பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய் பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

No comments: