வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநரை சந்தித்த சிறிதரன்
வடக்கின் வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
11/29/2024 08:51:00 PM
வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநரை சந்தித்த சிறிதரன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: