தந்தை செலுத்திய வாகனத்தில் மோதி 3 வயது குழந்தை பரிதாப மரணம்
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத குடியிருப்புக்கு முன்பாக ஜீப் வாகனமொன்று வீட்டிற்கு அருகில் நிறுத்துவதற்காக சென்ற போது குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
மருதானை பகுதியில் உள்ள புகையிரத வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 3 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று (10) பிற்பகல் வீட்டுக்கு அருகில் ஜீப் வாகனத்தை நிறுத்துவதற்கு தந்தை பின்பக்கத்திற்கு வாகனத்தை செலுத்திய வேளையில், பின்னால் வந்த அவரது குழந்தை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது,
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments: