News Just In

11/28/2024 05:39:00 PM

மட்டக்களப்பி ல் 15900 குடுங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 123 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பி ல் 15900 குடுங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 123 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.





(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15900 குடுங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 123 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் உறவினர் நன்பர்கள் வீடுகளில் 11 ஆயிரத்து 899 குடும்பங்களை சேர்ந்த 37,541 பேர்இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

இதேவேளைஇம்மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் 56 முகாம்களில் 2558 குடும்பங்களை சேர்ந்த 7241 பேர்இடம்பெயர்ந்து தங்க வைக்கப் பட்டிரிருக்கின்றனர்என இன்று வெளியிடப்பட்ட மாவட்ட அனைத்து முகாமைத்துவ நிலைய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது,

இதில் அதிகமான பாதிப்பு செங்கலடி பிரதேசசெயலகப்பிரிவில் ஏற்பட்டிருப்பதாகவும் 1063 குடும்பங்களைச் சேர்ந்த 3039 பேர் நலம்புரி நிலையங்களில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் இப் பிரிவில் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் இடம்பெயர்ந்து 2859 குடும்பங்களை சேர்ந்த 8789 பேர் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தங்கியிருப்ப தாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: