(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 49,123 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனைத்து முகாமை நிலையம் அறிவிக்கின்றது.
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப் பட்டிருப்போருக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்
இது தவிர சில நலம்புரி அமைப்புகளும் மேலதிகமாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது இம்மாவட்டத்தில்இறால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டவர்கள் இறால் பண்ணைகள் நீரில் மூழ்கி இருப்பதால் தமக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக இந்த இறால் உற்பத்தி யாளர்களின் சங்க இணைப்பாளர் மொஹமட் நஜீம் தெரிவித்தார்.
இதேவேளை போக்குவரத்து தடைப்பட்டுள்ள பட்டிருப்பு போரதீவு பாதையில் அத்தியாவசிய பணிகள் மற்றும் வைத்திய சேவைகளுக்காக பயணம் செய்யும் மக்களுக்காக உழவியந்திரங் கள் மற்றும் இயந்திரப் படகுகளில் பயணிப்பதற்கு கடல் படையினரும் சில தனியார் அமைப்புகளும் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு போரதி பகுதியில் நீதிவான் நீதிமன்றத்தின் மேற்பார் வையில் செயல்படுத்தப்படும் சிறுவர் பாதுகாப்பு பாதுகாப்பு சிறுவர் இல்லங்களில் வைக்கப்பட்டுள்ள சிறார்கள் நலங்களை கவனிக்க கலுவாஞ்சி குடி நீதிபதி ரஞ்சித் குமார் அப்பகுதிக்கு நேற்று மாலை விஜயம் செய்து அவர்களின் நிலைமைகளை கேட்டு அறிந்தார்.
வெல்லாவெளி மற்றும் போரதீவு பகுதிகளில் துண்டிக்கப்பட்டி ருந்த மின்சாரத்தை சீர் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது நேற்று மாலையில் சகலபிரதேசத்தி சகல துண்டிக்கப் பட்ட மின் இணைப்புகளும்மீள செயல்படுத்தப் படுகின்றது.
No comments: