News Just In

10/20/2024 04:32:00 PM

தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்?

தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்?



மட்டக்களப்பில் (Batticaloa) ஓட்டோ சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் வீதம் இலஞ்சம் கொடுத்து, தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஒருவர் வாக்கு கோருவதாக அறியமுடிகிறது.

நேற்று முன்தினம் (18) இரவு 635 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் ரூபா இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்தவகையில் 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா இவ்வாறு இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சில தொகுதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த நிலையில், நேற்றைய தினம் மட்டக்களப்பு தொகுதி மற்றும் கல்குடா தொகுதி என்பவற்றில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கவுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த வேட்பாளர் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு மதுபானம் வழங்கிவிட்டு, தமக்கு சார்பாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments: