News Just In

10/16/2024 07:30:00 AM

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!


அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு




அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென கூறியுள்ளார்.

முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? எப்படி? என யோசித்து, நிதி நிலைமையை வைத்து புதிய முடிவை எடுப்போம்.

இல்லை என்று சொல்ல மாட்டோம். நிதி நிலையைப் பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்ததும், அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று கடந்த அமைச்சரவை திடீர் முடிவு எடுத்தது.

ஆனால் நாங்கள் விசாரித்தபோது நிதி அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தான் உண்மையில் நடந்தது என கூறியுள்ளார்.

No comments: