பொதுத் தேர்தலுக்காக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பு - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 17 இலட்சத்து 65ஆயிரத்து 351 வாக்காளர்களுக்கு இடமளிக்கும் வகையில் 1,204 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் 18 இலட்சத்து 81 ஆயிரத்து 129 வாக்காளர்களுக்கு 1,212 வாக்களிப்பு நிலையங்களும், களுத்துறை மாவட்டத்தில் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 240 வாக்காளர்களுக்கு 735 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தத் தேர்தலுக்காக நாடு முழுவதும் மொத்தம் 13ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்களும் 2,034 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 1 கோடி 74 இலட்சத்து 30 ஆயிரத்து 354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: