News Just In

9/07/2024 06:53:00 PM

நிந்தவூர் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பினுடைய காரியாலயம் திறந்து வைப்பு



(அஸ்ஹர் இப்றாஹிம்)
4 வருடங்களுக்கு மேலாக சிறந்த நிர்வாகக் கட்டமைப்புடன் நிந்தவூர் பிராந்தியத்தின் தேவையுடையோருக்கான சேவைகளை தன்னார்வலர்களாக மேற்கொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டமைந்துள்ள நிந்தவூர் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பினுடைய புதிய காரியாலயம் அண்மையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் அவர்களினால் தீறந்து வைக்கப்பட்டது.

சமூக நலன் கருதி இந்த அமைப்பிற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் அவர்கள் , அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பெறுமதியான காரியாலய தளபாடங்கள் மற்றும் பொருட்களை தந்துதவியிருந்தார்.

அமைப்பின் தலைவர் ஏ.ஐ சிராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், செயலாளர், பொருளாளர், செயற்திட்ட முகாமையாளர், கணக்காய்வாளர்,செயற்திட்ட உறுப்பினர்கள் , இளையோர் அணி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

No comments: