நாளைய தினம் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அது தமது ஒற்றுமையின் சின்னத்தை வெளிப்படுத்தும் தேர்தல் சில தமிழ் தேசியத்தை சிதைக்கும் அரசியல்வாதிகள் சில விஷமிகள் நாளை நடக்க போகும் தேர்தலுக்குப் பிறகு பொதுச் சபை இயங்கப் போவது இல்லை நீங்கள் இவர்களை நம்பி வாக்களித்து உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது சஜித்துக்கு அல்லது ரணிலுக்கு போட்டால் அவர் உங்களுக்கு இது செய்வார் அது செய்வார் என்று இன்றுவரை பிரச்சாரம் செய்து வருகின்றனர் ஆனால் இதில் எதுவுமே நடக்கப் போவதில்லை .
கடந்த காலங்களில் நடந்த நிகழ்வு ஒன்றைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும் மன்னாரில் உள்ள திருக்கேதீச்சரம் கோவிலுக்கு அருகாமையில் விகாரை ஒன்று புதிதாக முளைத்தது இதனை அனைத்து தரப்பினரும் சேர்ந்து சென்று இந்திய தூதுவரிடம் சென்று யாழ்ப்பாணத்தில் முறைப்பாடுகளை செய்தனர் அப்போது அவர் அந்த கடிதங்களை வேண்டி விட்டு கதைக்க சென்றவரிடம் கூறிய பதில் நாங்கள் இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது எங்களால் முடிந்தது அவர்களுக்கு இதனை எடுத்து சொல்வது மட்டுமே மிகுதியை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் போனவர்களுக்கு ஆச்சரியம்!
ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று போனவர்கள் இந்திய அரசாங்கம் தங்களுக்கு ஏதாவது இவை நிரந்தரமாக அகற்றப்படும் என்ற செய்தியை சொல்வார்கள் என்ற நப்பாசையில் சென்று இருப்பார்கள் இதுதான் இன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமை இதனை முதலில் தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் இலங்கையின் இறையாண்மை பற்றி கதைக்கும் நாடுகள் தமிழ் மக்களின் இறையாண்மை பற்றி கணக்கெடுப்பதே கிடையாது ஏனென்றால் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை இந்த கதையை சொல்லி சொல்லியே அவர்கள் எமது உரிமைகளை தட்டிக் கழித்து வருகின்றார்கள்
ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று போனவர்கள் இந்திய அரசாங்கம் தங்களுக்கு ஏதாவது இவை நிரந்தரமாக அகற்றப்படும் என்ற செய்தியை சொல்வார்கள் என்ற நப்பாசையில் சென்று இருப்பார்கள் இதுதான் இன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமை இதனை முதலில் தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் இலங்கையின் இறையாண்மை பற்றி கதைக்கும் நாடுகள் தமிழ் மக்களின் இறையாண்மை பற்றி கணக்கெடுப்பதே கிடையாது ஏனென்றால் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை இந்த கதையை சொல்லி சொல்லியே அவர்கள் எமது உரிமைகளை தட்டிக் கழித்து வருகின்றார்கள்
இதனை முன்னிலைப்படுத்தும் விதமாக தமிழ் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகள் இணைந்து உருவாக்கிய பொது சபை இரண்டு முக்கிய விடயங்களை கொண்டு செல்ல வேண்டும் முதலாவது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இறையாண்மை, இரண்டாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை இந்த இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு இந்த பொதுச்சபை இயங்க வேண்டும் இது தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கும் தமிழ் மக்களின் இறைமைக்குமான சபையாக அது மாற்றம் பெற வேண்டும் அத்துடன் அந்த சபையில் முக்கியமாக இளம் சமுதாயமான தமிழ் மாணவர்களுக்கு அது பல்கலைக்கழக மாணவர்களாக இருக்கலாம் அல்லது பாடசாலையில் பகிர்கின்ற மாணவர்களாக இருக்கலாம் அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களாக இருக்கலாம் இவர்களுக்கு எல்லாம் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் இவர்களையும் இணைத்து இந்த சபை செயல்படும்போது ஒரு பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பொது நிறுவனங்கள், சாதாரண மக்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் இணைத்துக் கொண்டு இந்த தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கும் , இறைமைக்கும் ஆன சபை நிறுவப்பட வேண்டும் அவ்வாறு ஏற்படுகின்ற போது தற்போது வெளியில் நிற்கும் அரசியல்வாதிகள் குழப்பவாதிகள் அனைவரும் தமிழ் தேசியம் போலியாக பேசுபவர்களும் அதில் இணையாத பட்சத்தில் அவர்கள் தமிழ் மக்களின் இந்த இரண்டு விடயங்களுக்கும் எதிரானவர்களாக கருதப்பட்டு தமிழ் மக்களாகவே அவர்களை விலக்கி வைக்க முடியும்
இதனை தமிழ் மக்கள் பொதுச்சபை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்ல வேண்டும் நிறைய தமிழ் அரசியல்வாதிகளின் அடி மனதில் உள்ள பிரச்சனை என்னவெனில் தங்களது அரசியல் எதிர்காலம் இந்த தமிழ் மக்கள் பொதுச் சபையால் கேள்விக்கு உள்ளாக்கி இருப்பதாக அவர்கள் நினைத்து தமிழ் மக்களின் அரசியலை எதிர்காலத்தையே அவர்கள் குழப்புவதற்கு நினைக்கிறார்கள் இது ஒரு பிழையான நடவடிக்கை இவ்வாறானவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்
நாளைய தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளராகிய அரிய நேந்திரன் அவர்களுக்கு தங்களது பொன்னான வாக்குகளை சங்கு சின்னத்துக்கு வழங்கி தங்களது உரிமையை நிலை நாட்டுவதுடன் எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் அனைத்தும் இந்த பொதுச் சபை உருவாக்குகின்ற தமிழ் மக்களின் சுய நிர்ணயத்திற்கும் இறைமைக்குமான சபை ஊடாக மேற்கொள்ளப்படும் போதும் அனைத்து மக்களும் இதனுடைய நன்மைகளை பெற முடியும் அத்துடன் ஏனைய நாடுகள் தமிழ் மக்கள் சார்பாக சந்திக்க வரும்போது இந்த தமிழ் மக்களின் சுய நிர்ணயத்திற்கும் இறைமைக்குமான சபை அனைத்து சமூக மட்டங்களில் உள்ள பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தையை நடத்தும் போதும் அது தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தையும் இறைமையையும் அந்த நாடுகள் அங்கீகரித்ததாகவே முடியும் இதனை மனதில் கொண்டு இந்த பெயர் மாற்றத்தை ஏற்படுத்தி இளம் சமூகத்தையும் உங்களுடன் இணைத்து உங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு புலம்பெயர் தமிழ் மக்கள் வேண்டி நிற்கிறார்கள்
ஈழத் தமிழ் மகன்
பெரிய பிரித்தானியா
ஈழத் தமிழ் மகன்
பெரிய பிரித்தானியா
No comments: