News Just In

5/02/2026 09:13:00 AM

தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை


​தாக்​குதல் நடத்​தி​னால் தகுந்த பதிலடி கிடைக்​கும் என அமெரிக்காவுக்கு, ஈரான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே சண்டை நிறுத்​தம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்​கைகள் நிறைவேற​வில்லை என்​றால், ஈரான் மீதான தாக்​குதல்​களை நிறுத்​தப்​போவ​தில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்​தில் கூறி​யிருந்​தார்.

ஈரான்- அமெரிக்கா இடையே அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த பாகிஸ்​தான் மத்​தி​யஸ்​தம் செய்து வரு​கிறது. முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை தோல்​வியடைந்த நிலை​யில், 2-வது கட்ட பேச்​சு​வார்த்தை தாமத​மாகி வரு​கிறது. இந்​நிலை​யில், ஈரான் அதிபர் அலு​வலக தகவல் தொடர்பு அதி​காரி சையத் மெஹ்தி அளித்​துள்ள பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்கா கீழ்த்​தர​மான விளை​யாட்​டு​களில் ஈடு​படு​கிறது.

குழந்​தைகளை கொன்ற அதிபர் ட்ரம்ப் தோண்​டிய குழி​யில் சிக்​கிய அமெரிக்க அதி​காரி​கள் தப்​பிச் செல்ல வேண்​டும். ஈரான் மீது நடத்​திய தாக்​குதல்​களுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்​கி​விட்டு தங்​கள் நாட்​டுக்கு திரும்பி செல்ல வேண்​டும். ஈரான் அமை​தி​யை​யும், நட்​பை​யும் விரும்​பும் நாடு. எங்​களிடம் யாராவது அச்​சுறுத்​தல் மொழி​யில் பேசி​னால், அவர்​களுக்கு பலத்த அடி கிடைக்​கும். இவ்​வாறு சையத் மெஹ்தி எச்​சரிக்​கை விடுத்​துள்​ளார்​.

No comments: