News Just In

9/11/2024 10:02:00 AM

இயற்கை அனர்த்தமாகிய மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இணைந்த கரங்கள் அமைப்பால் உலர் உணவு மற்றும் கற்றல் உபகரங்கள் வழங்கி வைப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கடந்த மாதம் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வீடு மற்றும் அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்தித்த ஒலுவில் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பமொன்றுக்கு உலர் உணவுப் பொருட்களும், காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்திலும், திராய்கேணி அ. த. க. பாடசாலையிலும் கல்வி பயிலும் அக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் லோ.கஜரூபன்,காந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments: