News Just In

8/21/2024 08:08:00 PM

யாழில் வீசிய பலத்த காற்றால் கோவில் மீது விழுந்த பனைமரம்!

யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக யாழ் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தினால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பதினொரு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் புலோலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவில் மீது பனைமரம் முறிந்து விழுந்ததால் கோவிலும் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


No comments: