தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம இடமாற்றத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று, வீதியின் இடதுபுறக் காற்பரப்பில் மோதி, வளைந்து, வலதுபுறக் கம்பியில் மோதி கவிழ்ந்தது.
இன்று புதன்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் சொகுசு பஸ் ஒன்றுடனும் மோதியதில் பஸ்ஸும் சேதமானது.
காரில் இருந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
No comments: