News Just In

8/13/2024 11:19:00 AM

"எதிர்கால பல்கலை பெண் ஆளுமைகளை உருவாக்குவோம் " எனும் தொனிப்பொருளில் கல்முனை மஹ்மூத் பாளிகாவில் மாணவிகள் கெளரவிப்பு!

"எதிர்கால பல்கலை பெண் கல்வி ஆளுமைகளை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை மஹ்மூத் பாளிகாவில் தவணைப் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய தரம் 09 மாணவிகள் காலை ஆராதனை நிகழ்வில் பாராட்டி கெளரவிப்பு.


(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களின் செயற் திட்டத்தில் முன்னெடுக்கப்படும்
"எதிர்கால பல்கலை பெண் கல்வி ஆளுமைகளை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் அண்மையில் இடம்பெற்று முடிவடைந்த
முதலாம் தவணைப் பரீட்சையில் தரம் - 09 பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளில் பகுதி, வகுப்பு வாரியாக சிறந்த சித்திகளை பெற்றவர்களை கெளரவித்து முன்னேற்ற அறிக்கை வழங்கி வைக்கும் நிகழ்வு பகுதித்தலைவி எஸ்.ஜ. சாமிலா தலைமையில் காலை ஆராதனை நிகழ்வுடன் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கலந்து கொண்டார்.

பகுதி, வகுப்பு வாரியான முதல் மூன்று நிலைகளை பெற்ற தமிழ் மொழி மற்றும் இருமொழி மாணவிகளுக்குசான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பகுதிவாரியாக ஏனைய மாணவிகளை ஊக்கமளித்தல், கற்றலைத் தூண்டும் நோக்கிலும் மாணவிகளின் கலை கலாசார, ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் மேடை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், மற்றும் வகுப்பாசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments: