News Just In

8/13/2024 11:15:00 AM

வெள்ளைக் கொண்டைக்கடலை உண்டால் கிட்டும் ஆறு நன்மைகள்!




புரதம் நிறைந்த வெள்ளைக் கொண்டைக்கடலையை சில மணி நேரம் ஊற வைத்துதான் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் பொதுவாக ‘சென்னா’ என்று அறியப்படும் வெள்ளை கொண்டைக்கடலையின் நன்மைகளின் பட்டியல் இதோ...

கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், செரிமானக் கோளாறுகளைச் சீர்செய்ய வெள்ளை கொண்டைக்கடலை உதவியாக இருக்கிறது.

எலும்பு, தசை, குருத்தெலும்பு, தோல், ரத்தம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் புரதத்தை அதிகம் தருகிறது வெள்ளை கொண்டைக்கடலை.

நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருக்கும் மாங்கனீசு ‘வெள்ளை கொண்டைக்கடலை’யில் அதிகமாக இருக்கிறது.

ஒரு கப் வெள்ளை கொண்டைக்கடலையை உட்கொண்டால் அன்றாட தேவையில் 84.5% மாங்கனீசு கிடைக்கும்.

பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், பைட்டோ ஆஸ்டிரோஜன்ஸ் எனப்படும் தாவர ஹார்மோன்களை கொண்டிருப்பதால் பெண்களின் ஹார்மோன் அளவை சீராகப் பராமரிக்க வெள்ளை கொண்டைக்கடலை உதவுகிறது.

வெள்ளை கொண்டைக்கடலை இரும்புச்சத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது. பொதுவாக, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

வெள்ளை கொண்டைக்கடலை குறைந்த சர்க்கரை அளவை கொண்டிருப்பதால், மெதுவாகச் செரிமானம் அடையும், எடை குறைப்புக்கும் உதவும்.

கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், உடலின் ரத்தச் சர்க்கரை அளவை நிலைப்படுத்த வெள்ளை கொண்டைக்கடலை உதவுகிறது

No comments: