News Just In

8/03/2024 08:21:00 PM

யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன்: கஜேந்திரன் காட்டம்!



2015ஆம் ஆண்டில் யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய வாழ்வு தண்ணீரோடு அழிவதற்கு சுமந்திரனுடைய செயற்பாடுகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளும் தான் முழுக்காரணமாக இருந்தன.

சிறீதரன் என்பவர் பொதுவேட்பாளர் என்ற போர்வைக்குள் சென்று ஒரு புதிய ஒரு அனுகுமுறையை கையாண்டு கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டில் யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments: