News Just In

8/05/2024 01:17:00 PM

பொதுவேட்பாளரை கண்டுபிடிக்க முடியாத தமிழ் அரசியல்!




நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர் சார்பில் களமிறக்க இதுவரையில் ஒரு பொதுவேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமை என்பது துரதிஸ்டவசமான நிலையை எடுத்துக்காட்டுவதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழர் தரப்பில் உள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் நேற்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்ட விடயத்தை எடுத்துரைத்தார்.

மேலும் வடக்கு - கிழக்கின் அரசியல் பெரும் வங்குரோத்து நிலையில் இருப்பதான கேள்வி எழுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் நிச்சயமாக தனது ஆதரவென்பது தமிழர் பொதுவேட்பாளருக்கு இருக்கும் என அனந்தி அறிவித்துள்ளார்.

No comments: