நூருல் ஹுதா உமர்
கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் ரிட்ஸ்பரி நிறுவனத்தின் அனுசரனையில் நாடு பூராக நடைபெறும் 53 வது Sir-John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்-2024
கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் 03.08.2024 மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் 01 தங்க பதக்கம், 02 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்களை அழைத்துச் சென்று வழிகாட்டிய பொறுப்பாசிரியர் ஏ. கலீம் அஹமட் மற்றும் எம்.எம்.எம். ஹாஸிக் ஆகியோர்களையும், பயிற்றுவித்த ஏனைய உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கும் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீரர்களின் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை முதல்வர் ஏ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
No comments: