News Just In

8/29/2024 01:43:00 PM

பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்ட நிதியும் அதற்கான விளக்கமும்!



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28.08.2024 ஊடக அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கை தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிதியானது குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி மற்றும் பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலகத்தால் இவ் வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன. இக் கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் தொகையானது மேற்கூறப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தவறான விஷமப்பிரசாரங்கள் காரணமாக இவ் அறிக்கை வெளியிடப்படுகின்றது.

ம.ஆ.சுமந்திரன் பா.உ பேச்சாளர்

No comments: