News Just In

8/24/2024 04:18:00 PM

தமிழர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதில் அப்படி என்ன நிகழ்ந்துவிடப் போகின்றது?


கடந்த பல தசாப்தங்களாக தென்னிலங்கை வேட்பாளர் ஒவருக்குத்தானே தமிழ் மக்கள் வாக்களித்து வந்திருக்கின்றனர். இந்த ஒருமுறை தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதில் அப்படி என்ன நிகழ்ந்துவிடப் போகின்றது? இது தொடர்பில் அனைத்துத் தமிழ்த் தேசிய தரப்புகளும் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஒருவேளை, கட்சிகளின் தலைமைகள் தடுமாறினாலும் தடம்புரண்டாலும் கட்சிகளின் தொண்டர்கள் இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அது அவர்களின் வரலாற்றுக் கடமையாகும். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நாங்கள் தோற்கடித்துவிடுவோம் என்று சபதம் எடுப்பதில் என்ன பெருமை உண்டு? இதனால், எதனை சாதிக்க முடியும். மீண்டுமொரு முறை ஏமாற்றப்பட்டோம் – அல்லது, ஏமாறினோம் என்னும் பதிலைத் தவிர, வேறு என்ன நிகழந்துவிடப் போகின்றது?

No comments: