(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கனேடிய அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் 'இனங்களுக்கிடையே நட்புறவு ஒன்றியம்' (NEUF) ஏற்பாடு செய்திருந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை சேகரித்து அகற்றும் வேலைத் திட்டம் மருதமுனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம, கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
கடல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் அற்ற தூய பிரதேசங்களாக மாற்றுகின்ற இந்த முன்னோடி வேலைத் திட்டத்தில்
மூவினங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
இதன் மூலம் பெருந்தொகையான பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் வெற்றிகரமாக சேகரித்து அகற்றப்பட்டுள்ளன.
இவ்வேலைத் திட்டத்திற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை மாநகர சபையும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: