(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிரிபத்கொட சந்தியிலிருந்து செல்லும் மாகொல – சபுகஸ்கந்த பிரதான வீதியில் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்தொன்று வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வேன் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கார் சாரதியின் நித்திரை மயக்கமே இவ்விபத்திற்கு காரணம் என சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பந்தமாக சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: