(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அக்கரைபற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ,கிழக்கின் கேடயம் சமுக சேவைகள் அமைப்பின் தலைவருமான தொழிலதிபர் எஸ்.எம்.சபீஸ் மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் அம்பாரை மாவட்ட செயற்குழு முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (25) இணைந்து கொண்டார்.
இந்நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்ட செயற்குழுவின் தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்) தலைமையில் முன்னாள் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாகிர், மற்றும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி அன்சில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதே சபை தவிசாளருமான ஐ.எல்.முஹம்மட் மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.
No comments: