News Just In

8/13/2024 08:07:00 PM

சமஷ்டி அதிகாரத்தை வழங்க முடியாது: ரணில்!





சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலம்மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என தன்னை சந்தித்த தமிழ்த் தேசிய கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமஷ்டி தீர்வு கிட்டும்வரை 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என கூறிய ஜனாதிபதி, பொலிஸ்
அதிகாரம் தொடர்பில் பேசி முடிவு எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் 13ஆவது திருத்தம் தொடர்பில் தான் தயாரித்து வைத்துள்ள ஆவணம் ஒன்றையும் கட்சியினரிடம் வழங்கியுள்ளார்.இதன்போது தமிழ்க் கட்சிகள் முன்வைத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை நிச்சயம் தான் வழங்குவேன் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

No comments: