News Just In

8/17/2024 11:01:00 AM

மின்னேரிய யோத வாவியில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்பு!

யாசகம் கேட்கும் பெண்ணொருவர் மின்னேரிய யோத வாவியில் தவறி விழுந்து உயிரிழப்பு


(அஸ்ஹர் இப்றாஹிம்)
மின்னேரிய யோத வாவியில் விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னேரிய நகருக்கு மிக அருகிலுள்ள யோத வாவியில் பெண்ணொருவர் தவறி விழுந்து இரண்டு கிலோ மீற்றர் தூரம் அடித்துச் செல்லப்படுவதனை அவதானித்த மின்னேரிய பொலிஸாரின் உயிர்காக்கும் படையினர் பெண்ணை காப்பற்ற எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.


சடலமாக மீட்கப்பட்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இவர் இப் பிரதேசத்தில் யாசகம் கேட்பவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments: