எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு மகிந்த சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்த அமைச்சர் மகிந்தவை கடுமையாக திட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பில் கட்சியின் மற்றுமொரு பலமான நபரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த ஆட்சியில் இருந்த போது குடும்பத்தை தவிர மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை என சிரேஷ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இவ்வாறான பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும். ராஜபக்சவின் வழிகாட்டலுக்கு இனி ஒருபோதும் காத்திருக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சக்களுடன் இணைந்து ஆட்சியமைத்தது தனது வாழ்வில் செய்த பாரிய தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சர்கள் தொடர்பான தகவல்களை மீண்டும் ஒரு போதும் தம்மிடம் தெரிவிக்க வேண்டாம் எனவும், தனிப்பட்ட நட்பை அவ்வாறே பேண முடியும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் கடுமையாக தெரிவித்துள்ளார்.
No comments: