சஜித் பிரேமதாஸ வெற்றிபெற்றவுடன் புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று அந்தக் கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜித் பெரேரா தெரிவித்திருக்கின்றார். தான் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது அவரின் கட்சியை சேர்ந்தவர் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசியிருக்கின்றார்.
தேர்தல் பிரசாரத்தின்போதே வாக்குறுதியில் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறாயின், ஒருவேளை சஜித் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? பிரதான வேட்பாளர்களில் யாரோ ஒருவர் ஆட்சிக்கு வருவார். அது ஒருபுறமிருக்கட்டும். ஆனால், புதிய அரசியல் யாப்புக் கதையை எவ்வாறு நோக்குவது? ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்புக் கதை அதிகம் பேசப்பட்டது. யாப்பு வந்துவிடப் போவதான ஒரு மாயையும் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், என்ன நடந்தது? முதலில் புதிய அரசியல் யாப்பு பற்றி பேசுவதே அடிப்படையில் ஓர் அரசியல் கற்றுக்குட்டித்தனமாகும். இலங்கைத் தீவில் புதிய அரசியல் யாப்பு வரமுடியும். ஆனால், அந்த யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படும் என்று எண்ணினால் அவர்களை விடவும் அரசியல் விடலைகள் வேறு யாரும் இருக்க முடியாது
No comments: