(அஸ்ஹர் இப்றாஹிம்)
புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் மற்றும் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் கடந்த புதன்கிழமை காலை விசேட காலைக் கூட்டத்தின் போது பாடசாலை முன்றலில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இப்பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை தென் கிழக்குபல்கலைக்கழகபொறியியற்பீடவிரிவுரையாளருமான பொறியியலாளர் ஏ.எம். அஸ்லம் ஸஜா அவர்களும் கௌரவ அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளரும் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்றிட்ட பொறியியலாளருமான எம்.ஐ.எம். றியாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அதிதிகளால் மாணவர் தலைவர்களுக்கும் வகுப்புத் தலைவர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி சின்னங்களும் சூட்டப்பட்டன.
No comments: