News Just In

7/08/2024 05:49:00 AM

இந்தியா – ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேங்க இந்திய பிரதர் ரஷ்யாவிற்கு விஜயம்!




இந்தியா – ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 08) மாஸ்கோ செல்லவுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிர் புடின் அழைப்புக்கமைய அவர் இந்த மேற்கொள்ளவுள்ளார்.

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் நரேந்திர மோடி, இரு நாட்டு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள் குறித்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடினுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்பார்ப்பதாகவும், ரஷ்ய அதிகாரிகளுடனான இந்தியப் பிரதமரின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என ரஷ்யா செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

தனது ரஷ்ய விஜயத்தினை தொடர்ந்து, எதிர்வரும் 09 ஆம் திகதி இந்திய ஆஸ்திரியாவிற்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

41 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரியா செல்லும் முதல் பிரதமர் நரேந்திர மோடி என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, எதிர்வரும் 10 ஆம் திகதி இந்திய பிதமர் நரேந்திர மோடி, தாயகம் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: