(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக்கழகத்தின் இவ்வருடத்திற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கழகத்தின் நிறைவேற்று சபை மற்றும் முகாமைத்துவ சபை உறுப்பினர்களது பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது சீபிரீஸ் ஹோட்டலில் விமர்சையாக நடந்தேறியது.
இக்கூட்டத்தில் கழகத்தின் நிறைவேற்றுச் சபையினுடைய உறுப்பினர்களான ஆசிரியர் யூ.கே. நஜீம், தொழிலதிபர் எஸ். பஸ்மீர், தவிசாளர் எம்.ஜே.எம். காலித் மற்றும் தலைவர் யூ.எல். பாஹிம் ஆகியோர்களின் முன்னிலையில் கழகத்தினுடைய முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகள், வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டது
No comments: