(அஸ்ஹர் இப்றாஹிம் )
தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் நிகழ்வில் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி மாணவனுக்கு கல்வி சமூகம் மகத்தான வரவேற்பளித்தது.
அண்மையில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் நிகழ்வில் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி மாணவன் எஸ்.டிரெஸ்மன் மற்றும் அவரின் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் சிவதீபன் ஆகியோருக்கு கல்வி சமூகம் மகத்தான வரவேற்பளித்து கெளரவித்தது.
கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவரகள்,பழைய மாணவர்கள்,பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: