News Just In

7/26/2024 02:00:00 PM

மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய கல்லூரி சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய கல்லூரி சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (24) கல்லூரி சுவாமி நடராஜன் ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.

கல்லூரியின் சாரண பொறுப்பாசிரியர் ரீ.ருத்திராகரன் சாரண மாணவர்களுக்கான சின்னங்களை சூட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர்,உதவி அதிபர்,மாவட்ட உதவி சாரண ஆணையாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் கல்லூரியின் பிரதி அதிபராக, சாரண பொறுப்பாசிரியராக கடமையாற்றி செங்கலடி மத்திய கல்லூரிக்கு அதிபராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற கே.சுவர்ணேஸ்வரன் கல்லூரியின் சாரண மாணவர்களால் கெளரவிக்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது.

No comments: