News Just In

7/02/2024 06:01:00 AM

தமிழரசுக் கட்சியால் நொந்து நொடிந்து போன சம்பந்தனின் இறுதிக் காலம் !




தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் மூத்த அரசியல்வாதியாக திகழ்ந்த இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இவர் குறிப்பாக 1977ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஒரு செவ்வியொன்றின் போது, “தலைமைப் பதவியில் இருக்கும் சம்பந்தன் விலக வேண்டும் எனவும், வயது முதிர்ச்சியின் காரணமாக தொடர்ச்சியாகசம்பந்தனுக்குநாடாளுமன்றத்திற்கு வர முடியாது. இதனால் அவர் பதவி விலக வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

திடீரென சம்பந்தன் பதவி விலக வேண்டும் என சுமந்திரன் கூறியது சம்பந்தனுக்கு ஒரு பாரிய ஏமாற்றமாக அமைந்தது. இதன்போது, தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படுகின்றது. அத்தோடு, சம்பந்தனோடு கதைத்து பதவி மாற்றம் செய்வதற்காக ஒரு குழுவும் அமைக்கப்படுகின்றது. இந்தக் குழு தொடர்பில் சிவிகே. சிவஞானம் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார்.

இதற்கு முன்னர் இருந்த தந்தை செல்வா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வயது முதிர்ந்தாலும் கூட கட்சிக்குள் மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில், நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று கூறி அவரின் இறுதிக் காலத்தில் அரசியல் ரீதியாக அவரை துன்பத்திற்குள் உள்ளாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை சம்பந்தனை மனதளவில் மிகவும் பாதித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

No comments: