(அஸ்ஹர் இப்றாஹிம்)
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5ஆம் கட்டை கடவான காட்டுப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் உப்புவெளி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழ க் கிழமை(25) அதிகாலையில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்ற 44 வயதுடைய கே.ஜீ.நிலந்த இன்துனில் என்பவரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: