News Just In

7/19/2024 05:25:00 PM

17 வயது தேசிய கால்பந்தாட்ட அணியில் தெல்லிப்பளை மகாஜனா மாணவிகள் 4 பேர் இடம்பிடிப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

இந்திய கால்பந்தாட்ட சம்மேளனமும் இந்திய விமானப்படையும் இணைந்து நடாத்தும் 2024 ஆம் ஆண்டுக்கான SABROTO சர்வதேச கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை 17 வயதுப் பெண்கள் தேசிய அணியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் 4 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.இப்போட்டி ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த அணியில்
யசோதரன் கல்சிகா,
கேதீஸ்வரன் றேனுஜா,
யோகானந்தராசா உமாசங்கவி மற்றும்
சயந்தன் கியுஸ்ரிகா
ஆகிய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் இந்த தேசிய அணியின் உதவிப் பயிற்றுனராக கல்லூரியின் புகழ்பூத்த கால்பந்தாட்டப் பயிற்றுனர் திரு.சிவமகாராசா சாந்தகுமார் (சாந்தன்) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

No comments: