News Just In

6/23/2024 05:33:00 AM

இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க தயாராகும் அமெரிக்கா!



இலங்கை புவிசார் அரசியல் போட்டி நாடாக இருக்கும் நிலையில் இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க அமெரிக்கா தயாராகும் என அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.

அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இது தொடர்பில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகவும், பின்னர் மைத்திரி,ரணில் ஆட்சிக்காலத்தில் நீடிக்கப்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச அதற்கு தடையேற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் தான் ஒரு வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்ற அடிப்படையில் இந்தியா தன்னுடைய கட்டுப்பாட்டில் இலங்கை இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கும் மேலாக அமெரிக்காவும் பல முயற்சிகளை செய்து வருகின்றது.

இந்த விடயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு முறுகல் திரைமறைவில் மறைமுகமாக இருக்கத்தான் செய்கின்றது.

இந்த நிலையில், இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் போட்டி போட்டால் அது இரு தரப்பு போட்டியல்ல. அது முத்தரப்பு போட்டி. அதில் சீனாவின் கையே ஓங்கியிருக்கும்.

இலங்கையை பொறுத்தமட்டில் மகா சங்கத்தினர் பலம் அதிகம். அவர்கள் சீனாவுக்கே தங்களது ஆதரவு கொடுப்பர். குறிப்பாக, இலங்கையில் அரகலய போராட்டத்தின் போது மகா சங்கத்தினர் ஓரங்கட்டப்பட்டனர்.

No comments: