News Just In

6/09/2024 04:49:00 PM

கிழக்கின் கேடயத்துடன் இளைஞர்கள் இணைவு : நம்பிக்கையும், விடாமுயற்சியும் வெற்றியத்தரும் எஸ்.எம்.சபீஸ்



சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து கிழக்கின் கேடயம் அமைப்பாளர்களினால் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வு கிழக்கின் கேடயம் பொது செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான யூ. எல். நூருல் ஹுதா உமரின் தலைமையில் சாய்ந்தமருதில் இன்று (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எஸ் எம் சபீஸ் அவர்கள் உறுதியான நம்பிக்கையும் விடாமுயற்சியும் எமது சமூகத்தின் முன்னேற்றமான மாற்றத்திற்கு வித்திடும் என தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறைந்த வயதில் அனைவரும் பட்டப்படிப்பை பெற வேண்டும் எனும் நமது வேட்கை மிக விரைவில் நிறைவேறும் என்று நம்புவோம். இங்கு வந்துள்ள அனைவரும் என்ன கஸ்டப்பட்டேனும் பட்டப்படிப்பொன்றை நிறைவு செய்ய வேண்டும்.

சுயதொழில்களை உருவாக்கி பல பேருக்கு தொழில் வழங்க முடியும் என்ற நம்பிக்கையும், விடாமுயற்சியும் இளைஞர்களிடம் இருந்தால் சமுதாய மாற்றம் தானாக நம் கதவுகளைத் தட்டும்.

இவைகளை செய்து முடிக்க இளைஞர்கள் முறையாக வழிப்படுத்தப்படல் வேண்டும் அதற்கு ஒவ்வொரு கிழக்கின் கேடயத்தின் இளைஞர்களும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

No comments: