News Just In

6/20/2024 05:36:00 AM

ஜப்பானில் பரவி வரும் தசைகளை உண்ணும் பக்டீரியா!


ஜப்பானில் பரவி வரும் தசைகளை உண்ணும் பக்டீரியா குறித்து இலங்கையில் அச்சம் வேண்டாம்!



ஜப்பானில் பரவி வரும் தசைகளை உண்ணக்கூடிய ஒருவகை கொடிய வகை பக்டீரியா தொற்று தொடர்பில் இலங்கையில் வீண் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் பதில் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
ஜப்பானில் பரவி வருவதாக கூறப்படும் தசையை உண்ணக்கூடிய பக்டீரியா தொடர்பில் ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது புதிய வகை பக்டீரியாவோ, புதிய நோயோ அல்ல. ஏற்கனவே சமூகத்தில் உள்ள ஸ்ட்ரெப்டோகொக்கல் (Streptococcal) என்ற பக்டீரியா மூலமாக இந்த நோய் பரவி வருகிறது.

இந்த பக்டீரியாவின் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்களில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானோருக்கு இந்த நோய் அறிகுறி மிகவும் அரிதாக ஏற்படக்கூடும்.

இதனை முழுமையாக குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இது தீவிரமாக பரவக்கூடியது அல்ல. இலங்கையில் இது தொடர்பில் தேவையற்ற வகையில் அச்சமடையத் தேவையில்லை” என சுகாதார அமைச்சின் பதில் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே குறிப்பிட்டுள்ளார்.

No comments: