
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும்இடையிலான அரசியவ் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஒன்றின் தலைவரான சட்டத்தரணி சுதர்சன குணவர்தன இரு தரப்பினருக்கும் விவாத ஒளிபரப்பு தொடர்பில், எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.
கடந்த 21.03.2024 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பரிந்துரைத்தார்.
No comments: