News Just In

5/20/2024 04:46:00 PM

அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகள், பொது அமைப்புகள், சமய மற்றும் சமூக அமைப்புகளை மேம்படுத்தி வலுவூட்ட ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு !

நூருல் ஹுதா உமர்

அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகளுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஷ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணம் அட்டாளைச்சேனை தைக்கா நகர் அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகருமான எம்.ஜே.எம். அன்வர் நௌசாத் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (19) தைக்கா நகரில் வைத்து கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் அன்வர் நௌசாத் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தைக்கா நகர் வட்டாரத்தில் அமைந்துள்ள தைக்கா நகர் ஜும்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பத்ர் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹம்றா பள்ளிவாசல், கமு/அக்/ ஸாஹிரா வித்தியாலயம், கமு/அக்/ அர்ஹம் வித்தியாலயம், இளவன் ஸ்டார் விளையாட்டு கழகம், சோபர் விளையாட்டு கழகம், சூப்பர் சோனிக் விளையாட்டு கழகம், பைன் ஸ்டார் விளையாட்டு கழகம், அட்டாளைச்சேனை நடுவர் சங்கம், அஸ்ரப் ஞாபகார்த்த சனசமூக நிலையம், சீட் பௌண்டஷன், சம்புநகர் விவசாய அமைப்பு, நுஜா ஊடக அமைப்பு, போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.
இதன்போது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எஸ்.எல்.ஏ. ரசாக், கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ஏ.ஆர். சாதிக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.எஸ்.எம். உவைஸ், பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். றியாஸ், மு.கா பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முஸ்லிம்களின் அபிலாசைகள், முஸ்லிம்களின் அரசியல் போக்குகள், அட்டாளைச்சேனை அபிவிருத்தி மற்றும் பிராந்திய மக்களின் தேவைகள், முஸ்லிம்களுக்கு இருக்கும் சவால்கள், தீர்வுகள் பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: