News Just In

5/16/2024 11:02:00 AM

சம்மாந்துறையில் கூட்டாக இறங்கிய சுகாதார வைத்திய அதிகாரிகள் : 13 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!



நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டாலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் தலைமையில் காரைதீவு, நிந்தவூர், இறக்காமம் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகளும், அந்த சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் மேற்பர்வை பொதுச் சுகாதார அதிகாரிகளும், பொதுச் சுகாதார அதிகாரிகளும் இணைந்து நடாத்திய உணவு நிலைய பரிசோதனைகளில் 67 நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த 13 நிறுவனங்களில் இருந்து பெருமளவான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டது. இதன் போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 நிறுவனங்களுக்கு எதிராகவும் 105,000/- தண்டம் அறவிடப்பட்டது.

இந் நிகழ்வில் பங்கு கொண்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம். ரயீஸ், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கும் அவர்களது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயங்களின் மேற்பர்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பர்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எல்லோருக்கும் தமது நன்றிகளை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.

No comments: