News Just In

4/07/2024 11:15:00 AM

சமூக அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த வருடாந்த இஃப்தார் : முஷாரப் எம்.பி உட்பட பலரும் பங்கேற்றனர்.!



மாளிகைக்காடு செய்தியாளர்
மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த வருடாந்த இஃப்தார் நிகழ்வு மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நளீர் திறந்தவெளி அரங்கில் சமூக அபிவிருத்தி சபை தலைவரும், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் இன்று (06) நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் உலமாக்கள், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். றம்ஸின் பக்கீர், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்டன் ஜெகத், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, பிராந்திய பாடசாலைகளின் அதிபர்களான ஏ.சி.எம். நளீம், எம்.ஐ.சம்சுதீன், எம்.எஸ்.எம். பைசால், இ.மி.சபை உத்தியோகத்தர் யூ.கே.எம். ரஸாக், கல்முனை தலைமையக தபால் அதிபர் யூ.எல். பைசர், மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் அஸாம் எ அஸீஸ், அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், ஜனாஸா எரிப்பு, ஈஸ்டர் தாக்குதல், கலகட அத்தே யானசாரவின் கைது, முஸ்லிங்களின் எதிர்கால அரசியல் உட்பட பல்வேறு விடயங்களை ஆழமாக பேசினார். நிகழ்வுகளை மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை செயலாளர் எஸ். பஸ்லூன் நெறிப்படுத்தினார். மார்க்க சொற்பொழிவை அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார்.

No comments: