News Just In

4/20/2024 01:13:00 PM

வெயில் காலத்தில் இதயத்தை பாதுகாப்பது எப்படி?




கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது நமது இதயத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம், அதிகமான மன அழுத்தம் இவை அனைத்தும் இதய நோய்க்கு கொண்டு விடுகின்றது.

அதிலும் இன்று மாரடைப்பினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அதிலும் கோடை காலங்களில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க என்னென்ன வழிமுறைகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே உங்கள் மருத்துவரிடம் சென்று மருத்துவ பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், மற்றும் இதய ஆரோக்கியத்தை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் உங்களது இதயத்தை கஷ்டப்படுத்தலாம். இதயத்தில் கூடுதல் அழுத்தத்தினை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கும்.

ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடம்பை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இவை இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும்.

ஹிட்ஸ்ட்ரோக் மற்றும் வெப்ப சோர்வு போன்ற வெப்பம் தொடர்பான நோய்களின் அறிகுறிகளுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும். கடுமையான வியர்வை, குமட்டல், விரைவான இதயத்துடிப்பு இவற்றினை குறித்த கவனம் நிச்சயம் இருக்க வேண்டும்.

யோகா, தியானம் மற்றும் மாலையில் நிதானமான நடப்பது இவற்றினை கட்டாயம் செய்து மனஅழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் ஏர் கண்டிஷனிங் மூலம் வசதியான உட்புற சூழலை உருவாக்குவது மன அழுத்தத்தை தணித்து உங்கள் இதய அமைப்பை பாதுகாக்கும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

No comments: