News Just In

4/20/2024 05:03:00 PM

சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்!



கல்வி ராஜாங்க அமைச்சர் முன்னிலையில் அதிகளவிலான உடல் உறுப்புகள், தசை நாண்கள் மற்றும் தசைநார்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்.

கலைநேசன் மற்றும் லலிதாம்பிகை ஆகியோரின் மகன் 6 வயதான ஹர்சித்.கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் முன்னிலையில் வைத்து சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

இதன் போது அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த மனித உடல் உறுப்புகளின் உருவப்படத்தைப் பார்த்து அதிலிருந்த உடல் உறுப்புகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் போன்றவற்றை தொட்டு அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களை தெளிவாகக் கூறினார்.‌ இதில் 171 தசைநார்கள் 34 எழும்புகள். 44 தசைகள் போன்றவைகளை ஆங்கில மொழியில் இந்த மாணவன் இந்த சாதனையை மூன்று நிமிடம் முப்பது செக்கன்களில் கூறி சாதனை படைத்தார்.

இவருடைய இந்த முயற்சியை கண்காணித்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா போன்றோர் உலக சாதனையை உறுதி செய்தனர்.

இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபில் ஹெல்பிங் பீபில் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தியிருந்தன.

சோழன் உலக சாதனை படைத்த ஹர்சித்தைப் பாராட்டிய கல்வி இராஜாங்க அமைச்சர் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கம் போன்றவற்றை சாதனை மாணவனுக்கு வழங்கிப் பாராட்டினார்.

No comments: