News Just In

3/28/2024 07:10:00 PM

பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதியின் சத்துணவு திட்டம் மட்டக்களப்புமாவட்டத்தில்வெற்றிகரமாகமுன்னெடுக்கப்படுகிறது


(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் )



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய கல்வி அமைச்சர் அமைச்சு மாகாண கல்வி அமைச்சின் வழிகாட்டுதலில் வல யக்கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையில் முன்னெடுக் கப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக் கப் பட்டு வருகிறது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலைய அலுவலக பிரிவுகள் செயல்படும் 326பாடசாலைகளில் 52,473 மாணவர்களுக்கு இந்த போசாக்கு உணவு வழங்கும் திட் டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இந்த போசாக் உணவு வழங்கும் திட்டம் இன்று(2 7 ) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் கே ,பாஸ்கர் தலைமையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டன இத்திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போசா க்கான உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இத் திட்டம் பற்றி ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் மட்டக்களப்பு மாநகர பிரிவின் வலய அமைப் பாளர்பீ.ரீ.அப்துல் லத்தீப் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவுக்கமைய வழங்கப்படும் இந்த போசாக்கு உணவு விநியோகிக்கும் திட்டம் மாணவர்களுக்கு மிகுந்த பிரயோசனம் அளிப்பதுடன் குறிப்பாக வறி ய மாணவர் களுக்கு இது மிகவும் வரப் பிரசாதம் என தெரி வித்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்திய கல்வி வலய பிரிவிலுள்ள 66 பாடசாலைகளிள் உள்ள 13 ஆயிரத்து 858 மாணவர்களுக்கும் மட்டக்களப்பு மேற்குபிரிவில் 68 பாடசாலை களிள் உள்ள 13 ஆயிரத்து 954 மாணவர்களுக்கும் இந்தபோசாக்கு உணவு வழங்கப்படுகிறது.

இதுதவிர கல்குடா கல்வி வல யத்தில் உள்ள 74 பாடசாலைகளில் உள்ள 9,896 மாணவர்களுக்கும், மட்டக்களப்பு கல்வி வலயத் தின் கீழ் செயல்பாடும் 54 பாடசாலையில் உள்ள 6535 மாணவர் களுக் கும்,பட்டிருப்பு கல்வி வலயத்தில் 64பாடசாலைகளில் உள்ள 8230 மாண வர்களுக்கும், இந்தபோசாக்கு உணவு வழங்கப்படுகிறது கல்வி திணைகள் அறிக்கை தெரிவிக்கின்றது.

No comments: