News Just In

2/18/2024 09:55:00 AM

போக்குவரத்து விதி மீறல்; 793பேரைக் காட்டிக் கொடுத்த CCTV!





கடந்த 15 நாட்களில் மாத்திரம் கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய 793 பேர் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்திரம் மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பாக சுமார்26,000வழக்குகள்பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: