News Just In

12/11/2023 05:40:00 PM

வெளிவந்த துவாரகாவுடன் மரபணு பரிசோதனைக்கு தயார் : குடும்ப உறவு பகிரங்க சவால்!



கடந்த மாவீரர் தினத்தன்று துவாரகா எனக்கூறி வெளிவந்த காணொளியில் உள்ள பெண்ணுடன் தங்கள் குடும்ப சகிதம் மரபணு பரிசோதனைக்கு தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் மனோகரன் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 நிகழ்ச்சியொன்றி ல்  கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அன்றையதினம் வெளிவந்த காணொளியை நானும் எனது குடும்பத்தாரும் பார்வையிட்டோம். பார்த்த அந்தநொடியிலேயே இது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா அல்ல என்பது எங்களுக்கு விளங்கிவிட்டது.

இந்த விவகாரம் குறித்து மக்களை மேலும் ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் குடும்பத்தை பற்றி தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments: